இந்திய திருமணங்கள் என்றாலே சடங்குகளும் சம்பிரதாயங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் புரோகிதர் ஒருவர் செய்த கலாட்டா இணையதளத்தையே அதிர வைத்துள்ளது.

திருமணச் சடங்குகளின் போது மந்திரங்கள் ஓதுவதை விட, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியைப் பற்றி அவர் கேட்ட நகைச்சுவையான கேள்வி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது மணமகனிடம், “உங்களுக்கு நோரா ஃபதேஹி என்ன உறவு வேண்டும்?” என்று புரோகிதர் கேட்க, மணமகன் தயக்கத்துடன் “சகோதரி” என்று பதிலளித்தார்.

அதற்கு அந்த புரோகிதர், நோரா ஃபதேஹி உங்களுக்கு “அம்மா” போன்றவர் என்றும், அவரைப் பார்த்தால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்றும் கிண்டலாகக் கூறினார். இதைக்கேட்ட மணமக்களும் விருந்தினர்களும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“>

 

இந்த கலகலப்பான வீடியோ தற்போது 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பாரம்பரிய சடங்குகளில் இதுபோன்ற ஜாலியான தருணங்கள் திருமணத்தை இன்னும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்