சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஜன. 6) அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 12,830-க்கும், ஒரு சவரன் ரூ. 560 உயர்ந்து ரூ. 1,02,640-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 271-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
