தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹3,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை அவர் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

​பொங்கல் பரிசு விநியோகம் தடையின்றி நடப்பதற்காக, வழக்கமாக விடுமுறை நாளான ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நாளுக்குப் பதிலாக, பிப்ரவரி 7-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என உணவு வழங்கல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.