தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளை முடிவு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுதி செய்துள்ளது.
வரவிருக்கும் தேர்தலை அதிமுக தலைமையிலேயே எதிர்கொள்ளப் போவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், தற்போது பார்வர்டு பிளாக் கட்சியும் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
