தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்ததால், புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி வேறு பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பலத்த பேச்சு நிலவியது.
ஆனால், தற்போது அதிமுக கூட்டணியே தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ள அவர், ஒருவேளை தங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ‘தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பே’ முதல் நடவடிக்கையாக இருக்கும் என்கிற அதிரடி வாக்குறுதியுடன் தனது தேர்தல் நிலைப்பாட்டை இறுதி செய்துள்ளார்.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்த குழப்பம் நீங்கி, தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
