சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதில் இரண்டு நண்பர்கள் கைகளை நீட்ட, மற்றொரு நண்பர் கைகளை கழுவுவது போல திரவம் ஒன்றை ஊற்றுகிறார். அதைத் தண்ணீர் என்று நம்பி அந்த இருவரும் கைகளை நீட்ட, திரவத்தை ஊற்றிய நண்பரோ அது எரிபொருள் என்று தெரிந்தே தீயைப் பற்ற வைக்கிறார். அடுத்த நொடியே அந்த இரண்டு நண்பர்களின் கைகளும் தீப்பற்றி எரியத் தொடங்குகின்றன.

​பயந்துபோன அந்த இளைஞர்கள் பதற்றத்துடன் கைகளை அணைக்க முயல்கின்றனர். விளையாட்டாகச் செய்யப்பட்ட இந்த விபரீதச் செயல், அவர்களுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளைப் பார்க்கும் போதுதான், ஏன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நண்பர்களுடன் வெளியே அனுப்பத் தயங்குகிறார்கள் என்பது புரிகிறது.

நண்பர்கள் என்ற பெயரில் செய்யப்படும் இத்தகைய பொறுப்பற்ற செயல்களே பெற்றோர்களின் கண்டிப்புக்கும் பயத்திற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. வேடிக்கைக்காக உயிரோடு விளையாடும் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது.