தனது தாயின் 12 லட்சம் ரூபாய் கடனை 17 வயதிலேயே அடைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமன் துக்கல் என்ற அந்த இளைஞர், தனது தாயின் மீது கொண்ட அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான கடனைத் தீர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், தனது தாயிடம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமன், அவர் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பெண்மணி என்று சொன்னார். பின்னர் அவர் கைகளில் பணத்தை ஒப்படைத்து, இனிமேல் மாதந்தோறும் வீட்டுச் செலவுகளையும் தானே கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Aman Duggal (@aman.jkd)

இதைக் கேட்டு நெகிழ்ந்து போன அவரது தாய், ஆனந்தக் கண்ணீருடன் தனது மகனைக் கட்டியணைத்துக் கொண்டார். சுமார் ஓராண்டு கால உழைப்பிற்குப் பிறகு இந்தத் தருணத்தைச் சாத்தியப்படுத்தியதாக அமன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இளைஞரின் செயலைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், பெற்றோரை கவனித்துக் கொள்வதே ஒரு பிள்ளையின் ஆகச்சிறந்த கடமை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்களைப் பெற்றெடுத்தவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விதம் மிகவும் அற்புதம் என்று பலரும் இந்த வீடியோவிற்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.