சமூக வலைதளங்களில் எப்போதுமே ஒரு வீடியோ வைரலாகிறது என்றால், அதில் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கும். இன்று சென்னையில் நடைபெற்ற ஏவிஎம் சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடுவில் அமர்ந்திருக்க, அவரது வலது பக்கம் ரஜினிகாந்தும், இடது பக்கம் கமல்ஹாசனும் அமர்ந்திருந்தனர். இந்த ஒரு காட்சியை வைத்து X தளத்தில் (ட்விட்டர்) ஒரு பதிவு காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

​அந்தப் பதிவில், 2017-ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோது, “இங்கே சிஸ்டம் சரியில்லை, அதை மாற்ற வேண்டும்” என்று பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல், 2020-ம் ஆண்டு கமல்ஹாசன் “குடும்ப அரசியல் நாட்டையே குழிதோண்டி புதைக்கிறது” என்று விமர்சனம் செய்ததை நினைவுபடுத்தியுள்ளனர். அன்று அனல் பறக்கப் பேசிய இரண்டு துருவங்களும், இன்று முதலமைச்சருக்கு இருபுறமும் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து, “காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!” என்று நெட்டிசன்கள் அந்தப் பழைய விமர்சனங்களோடு ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.