சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் நள்ளிரவு 3 மணிக்குத் தனியாகச் சாலையில் நடந்து செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “யாராவது என்னைப் பின்தொடர்கிறார்களோ என்ற பயம் எனக்கு இல்லை; இந்தியாவில் இந்த நேரத்தில் தனியாக வெளியே செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் இந்தச் சாதாரணமான பாதுகாப்பு முறையே அந்த ஊரைத் தனக்குப் பிடிக்கக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

​இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், சிங்கப்பூரின் பாதுகாப்பைப் பாராட்டுவதோடு, ஒரு இந்தியப் பெண்ணாக இது மகிழ்ச்சி தந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு இல்லையே என்ற ஆதங்கத்தையும் கமெண்டுகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.