ஆண்டு முழுவதும் சம்பாதித்த பணத்தில் சிறிது எடுத்துக்கொண்டு, மனநிம்மதி தேடிச் சுற்றுலாச் சென்ற ஒருவருக்கு, எதிர்பாராத கசப்பான அனுபவம் நேர்ந்துள்ளது. இது குறித்த காணொளி தற்போது X வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், சுற்றுலாப் பயணி ஒருவர், தான் சென்ற இடமொன்றில், அங்கிருந்த ஒரு அதிகாரியின் செயல்களால் மனவேதனைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணி குறிப்பிட்டபடி, அந்த அதிகாரி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளூர் வாகனங்களை மரியாதையாக வழிவிட்டு, சுற்றுலா வந்த வாகனங்களை காத்திருக்க வைத்துள்ளார். மேலும், வாகன ஓட்டிகளிடமும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும், ‘வாயா, போயா’ போன்ற மரியாதை குறைவான சொற்களைப் பயன்படுத்திப் பேசியுள்ளார்.
வருஷம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி , மீதம் உள்ள பணத்தை வைத்து மன அமைதிக்கு ஒரு சுற்றுல போகலாம்னு வந்தால் .
அரசு அதிகாரிகள் இப்படி நடத்துகிறார்கள் இதற்கு ஒரு முடிவு இல்லையா?
@CMOTamilnadu @Udhaystalin @chennaipolice_ pic.twitter.com/oPCkcwVRmS
— Jeniffer (@jeni_off) January 4, 2026
இது குறித்து பயணி கேள்வி எழுப்பியபோது, மற்றொரு ஊழியர் மன்னிப்பு கோரியிருந்தாலும், இந்த சம்பவம், மனமகிழ்ச்சிக்காகச் சென்ற பயணியின் மனதை பெரிதும் பாதித்துள்ளது.
