சமீபத்தில் X வலைதளத்தில் ஒரு சுவாரஸ்யமான காணொளி வைரலாகி வருகிறது. இரண்டு பெண்கள் ஒரு எஸ்கலேட்டரை பயன்படுத்துவதற்காக நடந்து வருகின்றனர். அவர்களில் ஒரு பெண் ஏற்கனவே எஸ்கலேட்டரில் ஏற தொடங்கிவிட்டார். ஆனால், மற்றொரு பெண், எஸ்கலேட்டரில் கால் வைக்கத் தயங்கியபடியும், சற்று பயப்பட்டபடியும் அங்கேயே நின்று விடுகிறார்.
A gentle touch 😂😍 pic.twitter.com/iNo96WvG07
— A A D H A V A (@Aadhavsuriya) January 3, 2026
அப்போது, எதிர்பாராதவிதமாகப் பின்னால் வந்த ஒரு இளைஞன், அந்தப் பெண்ணின் தயக்கத்தைப் பார்த்து, சட்டென்று திரும்பி, தன்னுடைய இடுப்புப் பகுதியை அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதியில் படும்படி மெதுவாக இடிக்கிறார். இந்த திடீர்ச் செயல் அந்தப் பெண்ணை முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது மேலும் அவர் எஸ்கலேட்டரில் பயணிக்கத் தொடங்கிவிடுகிறார். இந்த காணொளி, இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து, வைரலாகி வருகிறது.
