எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்குவார்களோ, அதே அளவு சாமானிய மக்களிடம் மிகுந்த அன்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு ரயில் நிலையத்தில் வயதான மூதாட்டி ஒருவர் தான் கையால் செய்த சமோசாக்களை விற்பதற்காக பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள், அந்தப் பாட்டியைக் கண்டதும் அவரிடம் இருந்த அனைத்து சமோசாக்களையும் மகிழ்ச்சியுடன் விலை கொடுத்து வாங்கித் தீர்த்தனர்.
எந்தவித ஆரவாரமும் இல்லாமல், மிகவும் எதார்த்தமாக அந்தப் பாட்டியின் வாழ்வாதாரத்திற்கு உதவிய வீரர்களின் இந்தச் செயல் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கானவர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. கடினமான ராணுவப் பணிக்கு இடையிலும், ஏழை எளியவர்கள் மீது வீரர்கள் காட்டும் இந்த அக்கறை “உண்மையான இந்திய ராணுவம்” இதுதான் எனப் பலரையும் சொல்ல வைத்துள்ளது.
एक गरीब दादी समोसे बेच रही थी घर से बनाकर लाती है
रेलवे स्टेशन पर एक ट्रेन आती है उसमें बहुत सारे Indian Army उतरते हैं दादी को देखते हैं सारे समोसे ख़रीद लेते हैं बच्चों की तरह लूट लेते हैं pic.twitter.com/9BT92K60e1— Ranjan Singh 🇮🇳 (@RanjanSinghh_) December 27, 2025
“>
“துப்பாக்கி ஏந்தும் கைகள் அன்பையும் ஏந்தும்” என்று நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ராணுவ வீரர்கள் வெறும் எல்லைக் காவலர்கள் மட்டுமல்ல, அவர்கள் மனிதாபிமானத்தின் மிகச்சிறந்த அடையாளம் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
