சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் விபரீத செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்தில் திருத்தணியில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவமே சாட்சியாக உள்ளது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, ஒரு வாலிபர் செய்த வினோத செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்த வாலிபர், திடீரென தனது பையிலிருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுத்து, தான் வைத்திருந்த முழு இஞ்சியின் மீது ஊற்றி கடித்துச் சாப்பிட்டார்.
View this post on Instagram
இதைக் கண்டு சக பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், அடுத்து அவர் செய்த காரியம் மேலும் வியப்பை ஏற்படுத்தியது. தான் வாங்கிய டீயில் வாழைப்பழத்தைத் தொட்டுச் சாப்பிட்டதுடன், பெரிய கத்திரிக்காய் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் பச்சையாகக் கடித்துச் சுவைத்தார். இந்த வினோத காம்பினேஷன் உணவுகளை அவர் எவ்வித சலனமுமின்றி சாப்பிட்டதைக் கண்ட சக பயணிகள் சிலர் முகம் சுளித்தாலும், பலர் அவரது ‘ரீல்ஸ்’ மோகத்தைப் பார்த்து வியப்புடன் தலையசைத்தபடி சென்றனர்.
