தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிதி மற்றும் நீதி நிர்வாகம் சரியாக இல்லை என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கூட அரசிடம் நிதி இல்லாத சூழல் நிலவுவதாகவும் விமர்சித்தார். வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருச்சி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டையில் நடைபெறும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், பொங்கலுக்குப் பிறகு கூட்டணியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
