உலகம் முழுவதும் இன்று  புத்தாண்டு பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை பலரும் வரவேற்று உற்சாகமாக கொண்டாடினர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரான்ஸ் மோண்டானா நகரில் உள்ள ஒரு பாருக்கு புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் வந்துள்ளனர்.

 

அப்போது அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் இந்த விபத்தில் வெளிநாட்டவர்களும் சிக்கியதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.