முதுபெரும் நகரமான மும்பை 2026 புத்தாண்டுப் பிறப்பை உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பூர்வமான கொண்டாட்டங்களுடனும் வரவேற்றது. குறிப்பாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலியெழுப்பி முழக்கமிட்டது பயணிகளைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Rohit Prasad (@mridangamrohit)

மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்த ரயில்களின் ஹாரன் சத்தம் முழங்க பயணிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இது தவிர மெரின் டிரைவ், கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் ஜுஹூ கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் வண்ணமயமான மின் அலங்காரங்களுக்கு மத்தியில் புத்தாண்டைக் கொண்டாடினர்.

இந்த விழாக்காலக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சுமார் 17,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மும்பை மாநகராட்சி மற்றும் ரயில்வே கட்டடங்கள் மின்னொளியில் ஜொலிக்க, மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் எழுச்சியுடனும் புதிய ஆண்டைத் தொடங்கினர்.