2025-ஆம் ஆண்டு நிறைவடைந்து, புதிய ஆண்டான 2026-ஐ உலகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், புகழ்பெற்ற பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்புகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே பிரஞ்சு புரட்சி, ஹிட்லரின் எழுச்சி மற்றும் முக்கிய இயற்கை பேரிடர்களைத் துல்லியமாகக் கணித்த நாஸ்டர்டாமஸ், 2026-ஆம் ஆண்டு குறித்துப் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நாஸ்டர்டாமஸின் கணிப்புப்படி, 2026-ல் கடல்சார் பகுதிகளில் மிகப்பெரிய பதற்றம் உருவாக வாய்ப்புள்ளது. ஒரு நாட்டின் தவறான அரசியல் அல்லது ராணுவ முடிவின் காரணமாக, கடற்படைகளுக்கு இடையே நேரடி மோதல் ஏற்படலாம். குறிப்பாக, ஒரு பிரம்மாண்டமான கப்பல் கடலில் மூழ்கடிக்கப்படும் நிகழ்வு அரங்கேறும் என்றும், இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழல்களுக்கு இடையே, 2026-ல் மூன்றாம் உலகப்போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். ஒரு வல்லரசு நாடு அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராகும் சூழல் உருவாகலாம் என்றும், இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து, விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் (செவ்வாய் கிரக ஆய்வுகள் உட்பட) தடைபடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் பதற்றங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவை உலகம் சந்திக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கலாம். வேலைவாய்ப்பு இழப்பு, கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பொதுமக்களிடையே சமூக அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தொழில்நுட்ப ரீதியாக, 2026-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என அவர் கணித்துள்ளார். இது முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், அதன் எதிர்மறை விளைவுகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
நாஸ்டர்டாமஸின் கணிப்புகள் பலமுறை உண்மையாகி இருந்தாலும், இவை ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். நவீன உலக அரசியல் சூழலும், தலைவர்களின் முடிவுகளுமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.