சமூக வலைதளங்களில் அஜித்குமார் தனது ரசிகர்களைக் கண்டிக்கும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்குச் சென்ற இடத்தில் ஆரவாரம் செய்த ரசிகர்களைப் பார்த்து, “ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறீர்கள்?” என்று அஜித் கோபமாகக் கேட்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதைக் கண்ட விமர்சகர் ஒருவர், அஜித் பணத்தின் மீது மட்டுமே குறிக்கோள் கொண்டவர் என்றும், ரசிகர்களைத் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்துபவர் என்றும், இதுவே பந்தயக் களமாக (Racing) இருந்தால் அவர் வேறு மாதிரி நடந்திருப்பார் என்றும் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.
If the same thing was happened in racing, he would've acted differently.
Money-minded. He will do anything and use fans just for gaining money. pic.twitter.com/hsFcCkMAIX
— Troll Haters™️ (@TrollHaters_TH) December 31, 2025
விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அஜித்தின் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ரேஸ் டிராக் என்பது உற்சாகத்தையும் சத்தத்தையும் வெளிப்படுத்தும் இடம், ஆனால் கோவில் என்பது அமைதி பேணப்பட வேண்டிய புனிதமான இடம் என்று அவர்கள் விளக்கியுள்ளனர். இடத்திற்கு ஏற்றார் போல் அஜித்தின் செயல்பாடு மாறியுள்ளது நியாயமானது என்றும், பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் ரசிகர்களை அவர் கண்டித்தது சரியானதே என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
