சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வினோதமான கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை அயர்ன் செய்ய கையாண்ட ஒரு விசித்திரமான வித்தை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் மின்சார அயர்ன் பாக்ஸ் இல்லாத சமயத்தில், அந்த இளைஞர் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சூடுபடுத்தி, அதிலிருந்து வெளிவரும் நீராவியைப் பயன்படுத்தி தனது ஜீன்ஸ் பேண்ட்டைத் தேய்க்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Sima Kumari (@simakumari3355)

குக்கரில் விசில் வரும் அளவுக்கு சூடுபடுத்திய பிறகு, அதைக் கொண்டு மிக லாவகமாக அவர் துணிகளை அயர்ன் செய்யும் விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெறிஞர்கள், இந்தியர்களின் திறமைக்கும் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதற்கும் எல்லையே இல்லை எனப் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் உள்ளது என்றும், இத்தகைய அபாரமான திறமைகள் இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானது என்றும் நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இது போன்ற ஆபத்தான முயற்சிகளைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டில் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.