அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று தவறான திசையில் சென்று ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், எதிரே வந்த வாகனங்கள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் ஸ்கூட்டரில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு காற்றில் பறந்து கீழே விழுந்த காட்சி பார்ப்போரை உறைய வைக்கிறது. இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Ahmedabad:નારણપુરા ભાવિન ચાર રસ્તા ખાતે અકસ્માત
પુર ઝડપે આવતા કાર ચાલકે એક્ટીવા અને રીક્ષા બંનેને લીધા હડફેટે
એક્ટીવા ચાલક ગંભીર રીતે ઘાયલ
જોરદાર ટક્કર થી રીક્ષાની મુસાફરીની બદલાઇ ગઇ દિશા, જુઓ #CCTV #Accident #Police pic.twitter.com/eMw7bWvwF3— Sahil Dodiya (@SahilDo90793805) December 30, 2025
“>
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போக்குவரத்து விதிகளை மீறி தவறான பாதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
