ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் உள்ள கிலாயூவா எரிமலை வெடித்துச் சிதறியபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிமலைக் குழம்பு சீறிப்பாயும் இடத்திற்கு மிக அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா முன்பாக அந்த நபர்கள் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்ததோடு, கேமராவைப் பார்த்து சைகை காட்டினர்.
சுமார் இரண்டு நிமிடங்கள் அங்கு நின்றிருந்த அவர்கள், உயிருக்கு ஆபத்தான அந்தப் பகுதியில் எவ்வித பயமும் இன்றி உலாவியது இணையத்தில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எரிமலை வெடிப்பு நடக்கும் பகுதிகளில் நச்சு வாயுக்கள் மற்றும் திடீர் வெடிப்புகள் ஏற்படும் என்பதால், அந்த இடத்திற்குச் செல்ல பொதுமக்களுக்குக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அப்போது தங்கள் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என்று எரிமலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபர்களின் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு ஆபத்தான இடத்திற்குள் அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
