உலகிலேயே முதன்முறையாக ஏவுகணைகளைத் தகர்க்கும் வான் பாதுகாப்பு அமைப்பைப் போல, கொசுக்களைக் குறிவைத்து அழிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், புற்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கருவி, லேசர் கதிர்களைப் பயன்படுத்தி கொசுக்களைத் துல்லியமாகக் கண்காணிப்பதைக் காண முடிகிறது.

மேலும் ஒரு கொசு இந்தக் கருவியின் எல்லைக்குள் வந்தவுடன், அது உடனடியாகச் செயல்பட்டு லேசர் மூலம் அந்தக் கொசுவைச் சுட்டு வீழ்த்துகிறது. இந்த விசித்திரமான மற்றும் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த லேசர் கருவிக்கு ‘ஃபோட்டான் மேட்ரிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

“>

இது ‘லிடார்’ எனப்படும் லேசர் கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வினாடிக்கு சுமார் 30 கொசுக்களை அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. வழக்கமான கொசுவர்த்திகள் மற்றும் மின்சார இயந்திரங்களுக்கு மாற்றாக, அதிக துல்லியத்துடன் செயல்படும் இந்த ‘கொசு வான் பாதுகாப்பு அமைப்பு எதிர்காலத்தில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.