காங்கிரஸ் முக்கியப் பிரமுகரான எனுகு ரவீந்தர் ரெட்டியின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படும் தேவேந்தர் ரெட்டி, பான்சுவாடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் இது குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒரு தனியார் மருத்துவமனை அருகே தேவேந்தர் ரெட்டியை அந்தப் பெண்ணின் கணவர் கையும் களவுமாகப் பிடித்தார். ஆத்திரமடைந்த அவர், நடுத்தெருவில் வைத்துத் தனது காலணியால் தேவேந்தர் ரெட்டியை விளாசினார்.
A close aide of Congress leader Enugu Ravinder Reddy, Devender Reddy, was allegedly caught harassing a married woman for the past month in Banswada, Kamareddy district.
The woman informed her husband, who caught the accused red-handed at a private hospital, thrashed him with… pic.twitter.com/ECvUglG99h
— Deccan Daily (@DailyDeccan) December 25, 2025
இந்தச் சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பான்சுவாடா காவல் நிலைய அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மற்றும் பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நிலைய அதிகாரி (SHO) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றாலும், பொதுமக்களின் ஆக்ரோஷம் மற்றும் ஆதாரங்கள் காரணமாகச் சட்டம் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
