இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரைப் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அப்போது அந்தப் பெண்ணிற்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணை ஓங்கி அறையவே, அதில் அந்தப் பெண்ணின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே ஒரு பெண்ணிடம் இப்படி அநாகரிகமாகவா நடந்து கொள்வது?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தவறு செய்திருந்தாலும் அபராதம் விதிக்கலாமே தவிர, இப்படித் தாக்க யாருக்கும் உரிமை இல்லை எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.