காட்டு ராஜா சிங்கம் என்றாலே அஞ்சாத ஒரு மிருகம் தான். ஆனால், சில நேரங்களில் சிங்கம் கூட மிரளும் ஒரு உயிர் உண்டு என்றால் அது முதலை தான். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சிங்கம் ஆற்றைக் கடக்கக் கரை ஓரம் வந்து நிற்கிறது.
ஆற்றுக்கு நடுவே ஒரு ராட்சத முதலை இருப்பதைப் பார்த்ததும், கம்பீரமாக வந்த சிங்கம் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறது. தண்ணீருக்குள் நடக்கும் சலசலப்பைக் கவனித்த சிங்கம், அந்த ஆபத்தான சூழலில் துணிச்சலை விடச் சமயோசித புத்தி தான் முக்கியம் என்பதை உணர்ந்து மிக நிதானமாகச் செயல்பட்டது பார்ப்போரை வியக்க வைத்துள்ளது.
The lion gets startled by the massive crocodile’s sudden lunge, but stays remarkably calm as it crosses the dangerous river! 🦁🐊 pic.twitter.com/xLKCUD6iqh
— Beauty of music and nature 🌺🌺 (@Axaxia88) December 26, 2025
முதலை திடீரெனத் தாக்க முயன்றபோது ஒரு கணம் நிலைகுலைந்த சிங்கம், பின்னர் மிக லாவகமாகத் தண்ணீருக்குள் இறங்கி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தது. சுமார் 57 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், அந்த முதலை தன்னை நோக்கி வருவதைத் தெரிந்துகொண்டு, அதனிடமிருந்து தப்பித்துத் தந்திரமாக நதியைக் கடந்து கரையேறியது.
“ஆபத்து என்று தெரிந்தும் நிதானமாகச் செயல்பட்டது தான் சிங்கத்தின் ராஜதந்திரம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். புத்திசாலித்தனமும், பொறுமையும் இருந்தால் எந்த ஒரு கடினமான சூழலையும் வெல்லலாம் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
