புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள பதிவில், அனைத்துப் பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000, திருமணமாகாத பெண்களுக்கு ₹60,000 மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் 12 கிராம் தங்கம் மற்றும் ₹1 லட்சம் ரொக்கம், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹20,000 எனப் பிரம்மாண்டமான அறிவிப்புகள் அடுக்கப்பட்டுள்ளன.
புது பீசு வந்திருக்கு, ஏதோ சொந்தப்பணத்தில் கொடுப்பதுபோல் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 தொகை ( தமிழ்நாட்டில் ரூ.12,000 கொடுப்பதற்கே நாக்கு தள்ளுது) திருமணமாகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.60,000, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.35,000 உதவி தொகை, திருமண உதவி திட்டம் 12 கிராம்… https://t.co/3WMmUmZ3Hp
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) December 25, 2025
நடிகர் தாடி பாலாஜி இந்த வாக்குறுதிகளை விளக்கும் காணொளி ஒன்றுடன் பகிரப்பட்டுள்ள இந்தப் பதிவு, கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. “தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ₹12,000 உதவித்தொகை வழங்குவதற்கே அரசு திணறி வரும் நிலையில், புதுச்சேரியின் நிதிநிலைமை கூடத் தெரியாமல் இவ்வளவு பெரிய வாக்குறுதிகளை அளிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகச் சொந்தப் பணத்திலிருந்து ₹100 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ‘செம்ம காமெடி’ எனக் கிண்டல் செய்துள்ளனர். இந்த விமர்சனப் பதிவு தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.
