சமூக வலைதளங்களில் தினசரி வெளியாகும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் கிராமப்புற மக்களின் எதார்த்தமான வாழ்வியலைச் சொல்லும் பதிவுகள் எப்போதும் தனித்துவமானவை அந்த வகையில் ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஒருவர் மைதானத்தையே டிராக்டர் மூலம் உழுத வினோதமான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
போதிய இடவசதி இல்லாத சூழலிலும் விளைநிலங்களையே மைதானமாக மாற்றி ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு மத்தியில் தமக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோபமடைந்த அந்த நிலத்தின் உரிமையாளர் ஆட்டத்தின் இடையிலேயே டிராக்டரை ஓட்டி வந்து ஆடுகளத்தை உழுது எறிந்துள்ளார்.
திகைத்துப் போன வீரர்கள் செய்வதறியாது வேடிக்கை பார்க்க மைதானத்தை விவசாய நிலமாக மாற்றிய இந்தச் சம்பவம் பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும் கிராமப்புற இளைஞர்களின் கிரிக்கெட் மோகத்தையும் அங்குள்ள கலகலப்பான சூழலையும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளி குறித்து இணையவாசிகள் பலரும் கிராமத்து ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாக நகைச்சுவையாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
