சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை பதற வைக்கிறது. உயரமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக பிடிதவறி கீழே விழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்தரத்தில் ஊஞ்சலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அது பெரும் அசம்பாவிதமாக முடிந்திருக்கும். அந்த இக்கட்டான சூழலில், அங்கிருந்த ஒரு இளைஞர் சற்றும் யோசிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஊஞ்சலுக்கு அருகில் பாய்ந்து சென்ற அவர், மிகச் சரியான நேரத்தில் அந்தப் பெண்ணைப் பிடித்து பத்திரமாக மீட்டெடுத்தார்.

“>

இந்நிலையில் அந்த இளைஞரின் அசாத்திய துணிச்சலையும், சமயோசித புத்தியையும் பாராட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளைக் குவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.