பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவர் வகுப்பறையில் போஜ்புரி பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனமாடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பிரபல பாடகர் அரவிந்த் அகேலா கல்லு பாடிய பாடலுக்கு எந்தவித தயக்கமும் இன்றி அந்தச் சிறுவன் வெளிப்படுத்தும் துள்ளலான நடன அசைவுகளும் முக பாவனைகளும் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by crazyxy_88 (@crazyxy_88)

கைபேசி மற்றும் கணினி விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கிக் கிடக்கும் இன்றைய காலத்தில் இத்தகைய திறமைகள் வெளிப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கூட ஆகாத இந்தக் காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில் அந்தச் சிறுவனின் தன்னம்பிக்கையையும் ஆர்வத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.