இயற்கையின் படைப்பில் பாம்புகள் எப்போதுமே ஆச்சரியமானவை. அந்த வகையில், தனது தலையை விடப் பல மடங்கு பெரிய முட்டை ஒன்றை லாவகமாக விழுங்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாம்பு மெல்ல மெல்லத் தன் தாடையை விரித்து, அந்தப் பெரிய முட்டையை முழுவதுமாக விழுங்குகிறது. முட்டை உள்ளே சென்றதும் பாம்பின் முகம் ஒரு பந்து போல வீங்கிப் போய் விடுகிறது.
ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அந்தப் பாம்பு முட்டையின் ஓட்டை மட்டும் வெளியே துப்புகிறது. உள்ளே போன முட்டை என்ன ஆனது என்று பார்த்தால், அதன் உள்ளே இருந்த திரவத்தை மட்டும் குடித்துவிட்டு, செரிக்க முடியாத ஓட்டை கச்சிதமாக வெளியே தள்ளிவிட்டது அந்தப் பாம்பு.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) December 25, 2025
இந்த வகை பாம்புகள் ‘முட்டை தின்னும் பாம்புகள்’ (Egg-eating snakes) என்று அழைக்கப்படுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாம்புகளுக்கு விஷம் கிடையாது. இவற்றின் தாடைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவை என்பதால், தன்னால் விழுங்க முடியாது என்று நாம் நினைக்கும் பெரிய முட்டைகளையும் இவை எளிதாக விழுங்கிவிடும்.
இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை காணப்படும் இந்த பாம்புகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் மரங்களில் ஏறிப் பறவைகளின் முட்டைகளைத் தேடி வேட்டையாடும் குணம் கொண்டவை. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்த 25 நொடி வீடியோவை இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
