ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள் மற்றும் ஆட்களுடன் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி நோக்கிச் சென்ற அந்த ஆட்டோவில் இருந்து திடீரெனத் தண்ணீர் பாட்டில் ஒன்று கீழே விழுந்ததால், அதன் ஓட்டுநர் ஆட்டோவைச் சாலையின் நடுவிலேயே நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் பின்புறத்தில் பலமாக மோதித் தள்ளியது. இந்த மோதலின் வேகத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது.
உள்ளே ஆட்களுடன் நடுரோட்டில் நின்ற ஆட்டோ – வந்த வேகத்தில் மோதி தள்ளிய டேங்கர் லாரி #erode #accident #lorry #cctv pic.twitter.com/Udw5oPj0H3
— Thanthi TV (@ThanthiTV) December 25, 2025
“>
ஆட்டோவில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்துச் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
