கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மும்பை அணி வீரர்களுடன் இணைந்து வாழ்த்து தெரிவிக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோஹித் சர்மாவுடன் அபிஷேக் நாயர், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட வீரர்கள் உற்சாகமாகப் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

இதில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவில் இருக்கும் இளம் வயது அபிஷேக் நாயர், தற்போதைய இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மாவைப் போலவே அச்சு அசலாக இருப்பது தான். இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “திலக் வர்மா கால இயந்திரம் மூலம் பின்னோக்கிச் சென்றுவிட்டாரா?” என்றும், “அபிஷேக் நாயருக்கும் திலக் வர்மாவிற்கும் இடையே இவ்வளவு பெரிய உருவ ஒற்றுமையா?” என்றும் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இந்த இரு வீரர்களின் உருவ ஒற்றுமை குறித்த விவாதங்கள் இணையத்தில் தற்போது பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளன.