விஜய் ஹசாரே கோப்பை 2025-26 தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா 155 ரன்களும், டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 131 ரன்களும் விளாசி அசத்தினர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டிற்குத் திரும்பிய இந்த ஜாம்பவான்களின் ஆட்டத்தை நேரலையில் காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அவர்களின் ஆதங்கத்தைப் போக்க பிசிசிஐ சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மிகக் குறைந்த தரத்தில் இருந்ததால், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யை ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிசிசிஐ-யை மறைமுகமாகக் கிண்டல் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. விராட் கோலியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வீடியோ தரம் 480p ஆக இருந்தாலும், அவரது இன்னிங்ஸ் 4K தரத்தில் இருந்தது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

“>

 

நட்சத்திர வீரர்களின் அபாரமான சதங்களைக் கொண்டாடுவதை விட, பிசிசிஐ வெளியிட்ட வீடியோவின் தரம் குறித்த சர்ச்சையே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.