இந்திய தடகள வீராங்கனை ஜோதி யாராஜி பதக்கம் வென்றபோது, காலியான மைதானத்தில் அவர் தனியாக அழுதுகொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தவறான தகவல்களுடன் பரவி வருகிறது. 2025-ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தங்கம் வென்றதாகவும், அவருக்கு ஆதரவு அளிக்க யாருமே இல்லை என்றும், அரசு கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், உண்மையில் இது 2023-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும். ஜோதி யாராஜி தங்கம் வென்று பதக்கம் வாங்கும் நேரத்தில் பலத்த மழை பெய்ததால், அங்கிருந்த ரசிகர்கள் ஒதுங்குவதற்காக மைதானத்தின் மற்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால்தான் மைதானம் காலியாக இருப்பது போல் தோன்றுகிறது. ஜோதி தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியிலேயே கண் கலங்கினார். ஜோதி யாராஜிக்கு மத்திய அரசின் ‘டாப்ஸ்’ திட்டத்தின் மூலமும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலமும் முழுமையான நிதி உதவியும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
While Jyothi Yarraji from Vizag, #Andhra, stands alone on the podium with her gold medal,
no cheers from the empty stands. Where’s the support? Govt pours billions into cricket, ignoring stars in athletics & other sports. #SupportAllSports #JyothiYarrajipic.twitter.com/jWY5qWzl0G— విరాట్ వీర్ (@viratveer039) December 23, 2025
“>
எனவே, ஒரு வீராங்கனையின் வெற்றியைத் தவறான தகவல்களுடன் பரப்புவதை விட, அவரது உண்மையான உழைப்பைப் பாராட்டுவதே சிறந்தது.
