திருமணம் என்றாலே இளைஞர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் வகையில், எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவருக்குத் தெரியாமல் வேறொரு நபருடன் வீடியோ காலில் மிகவும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனை எதிர்பாராத விதமாக வெளியில் இருந்து கவனித்த அவரது கணவர், அந்த அராஜகத்தை அப்படியே தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இந்தக் காணொளி பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

“வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சவால்களா?” என்றும், “இப்படியெல்லாம் நடப்பதைப் பார்த்தால் திருமண பந்தத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திருமண உறவில் நிகழும் இத்தகைய ஏமாற்றங்கள், தற்கால இளைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.