திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தாய் தந்தையை இழந்த மூன்று பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சிவகுமார் மற்றும் சுமதி தம்பதியினர் ஐந்து ஆண்டு கால இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சுமதி ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் சிவக்குமார் தையல் வேலை செய்து தன்னுடைய 3 பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த நிலையில் அவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவினால் இறந்துவிட்டார்.

இவர்களது மூத்த மகள் ஸ்வேதா 12-ம் வகுப்பும் இளையமகள் சுவாதி 11-ம் வகுப்பும் மகன் சிவேஸ்வர் நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறும்போது எங்கள் அப்பா உயிரிழந்து விட்டதால் தாய் மற்றும் தந்தை வழி என இரண்டு வகையிலும் எங்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லாததால் அரசாங்கம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனவும் தங்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

https://x.com/i/status/2003674179451879498

தற்போது சிறுமிகள் கூரை வீட்டில் அதாவது ஒழுகும் வீட்டில் இருப்பதால் அதையும் சரி செய்து தருமாறு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு உணவு யாராவது கொடுக்கும் நிலையில் சிறுவன் காலை பள்ளிக்கு சீக்கிரம் சென்று சாப்பிடுவதோடு அந்த சிறுமிகளும் அருகில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று மதிய சாப்பாடு சாப்பிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட பொருட்களை ஆசிரியர்கள் வாங்கிக் கொடுப்பதாக கூறப்படும் நிலையில் இதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பிரபல பாலிமர் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

https://x.com/i/status/2003656526070972783