சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், பாஜக பிரமுகர் அக்ஷய் கார்க் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியில் கட்டுமான ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். இன்று கேஷ்லா கிராமத்தில் நடந்து வரும் சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்றபோது, கருப்பு நிற காரில் வந்த முகமூடி அணிந்த மூன்று பேர் இவரை வழிமறித்தனர்.

​கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் அக்ஷய் கார்க்கை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.