ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளியின் மேற்கூரைகள் உடைந்து, சுவர்கள் இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. “உலகத்தரம் வாய்ந்த பள்ளி” என்று கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோ, பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு மோசமான பராமரிப்பு இல்லாத கட்டிடத்திற்குள் மாணவர்கள் எப்படி அமர்ந்து படிக்க முடியும் என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
World class school of Rajasthan, under 3 engine visionaries..
Breathtaking..pic.twitter.com/4f8nHergdI
— 𝕲𝖆𝖓𝖊𝖘𝖍 * (@ggganeshh) December 21, 2025
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “வீண் விளம்பரங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும் அரசாங்கம், குழந்தைகளின் கல்வி கற்கும் இடத்தை ஏன் இப்படி விட்டு வைத்திருக்கிறது?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் இந்தப் பள்ளியை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
