பெங்களூருவில் ரேபிடோ கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு, அந்த ஓட்டுநர் இழைத்த கொடுமை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி இரவு, அந்தப் பெண் தனது கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, காரில் அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கவே, அதைச் சற்று குறைக்குமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணை மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, நள்ளிரவு என்றும் பாராமல் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வலுக்கட்டாயமாக காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்ற அந்தப் பெண்ணுக்கு, அங்கேயும் முறையான உதவி கிடைக்கவில்லை என்றும், சமாதானம் செய்து கொள்ளுமாறு போலீஸார் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நீதிமன்றத்தை அணுகி அவர் புகார் அளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Star Girl ✨ (@stargirl_on_the_go)

“>

தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை 1.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேபிடோ நிறுவனம் அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.