திமுகவை வீழ்த்துவதற்காகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைய வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த அழைப்பைத் தவெக தரப்பில் அருண்ராஜ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தமிழருவி மணியன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், தவெக-வின் அரசியல் நகர்வுகளுக்கு அவருடைய அறிவுரை தேவைப்படவில்லை என்றும் அவர் மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
மேலும், “யாருக்கு அறிவுரை தேவையோ அவருக்குத் தமிழருவி மணியன் அறிவுரை வழங்கினால் போதும், எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பாதையைத் தாங்களே தீர்மானிப்போம் என்பதை உறுதிபடக் கூறியுள்ள தவெக தரப்பின் இந்தப் பதில், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடப் போகிறதா அல்லது புதிய வியூகம் அமைக்கிறதா என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.
