தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் சரத்குமார் மிகவும் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துகளைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவரைக் கூட்டி வந்து அவர் முன்னால் மைக்கை வைத்து அவரிடமே கேளுங்கள்” என்று கூறினார்.

மற்றவர்களைப் பற்றிப் பேசி அவர்களுக்கு விளம்பரம் (TRP) தேடிக்கொடுக்கத் தான் விரும்பவில்லை என்றும், விஜய்யை இன்னும் ஒரு அரசியல்வாதியாகத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சரத்குமார் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
​சக நடிகராக இருந்தாலும், அரசியலில் விஜய்யின் செயல்பாடுகள் ஒரு முழுமையான தலைவருக்கு உரியதாகத் தனக்குத் தெரியவில்லை என்பதை அவர் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.