குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தான்யா சங்காணி என்ற அமெரிக்கப் பெண், இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தான் தங்கியிருந்த ஹோட்டலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் அவரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக, ஹோட்டல் ஊழியர் ஒருவர் நீண்ட தூரம் பயணித்து அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வந்து கொடுத்து உதவியது அவரைப் பெரிதும் நெகிழச் செய்துள்ளது.
மேலும் தன் அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்த தான்யா, “இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்” என்று கண்கலங்கக் கூறுகிறார். இணையதளங்களில் இந்தியாவைப் பற்றிச் சித்தரிக்கப்படும் பிம்பத்திற்கு அப்பாற்பட்டு, இங்குள்ள மக்களின் மனிதநேயம் அளப்பரியது என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
अमेरिका में जन्मी तान्या संगानी ने भारत में मिला अपना एक अच्छा अनुभव शेयर किया।
गुजरात के मधुबन रिसॉर्ट एंड स्पा में ठहरते समय उनकी तबीयत खराब हो गई थी, होटल के स्टाफ ने उनकी पूरी मदद की और उनके लिए दवा मंगवाई। इस प्यार और सेवा से तान्या बहुत भावुक हो गईं, उन्होंने कहा कि भारत… pic.twitter.com/qyTAPiip62
— JIMMY (@Jimmyy__02) December 20, 2025
“>
இந்நிலையில் ஒரு சிறிய உதவி கூட எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்தியப் பண்பாட்டின் உன்னதமான ‘அதிதி தேவோ பவ’ (விருந்தினரே தெய்வம்) என்ற கொள்கையை இது பிரதிபலிப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
