வேலை தேடும் இணையதளங்களில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள வினோதமான வேலைவாய்ப்பு விளம்பரம் இப்போது ‘நச்சுச் சூழல்’ (Toxic Environment) குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பரத்தில், அலுவலக நேரம் காலை 9:30 மணிக்குத் தொடங்கும் என்று குறிப்பிட்டுவிட்டு, வேலை முடியும் நேரம் குறித்து “வேலைப்பழுவைப் பொறுத்து ஷிப்ட் நீட்டிக்கப்படும்” என்று அதிர்ச்சியூட்டும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் வரை கட்டாயம் உழைக்க வேண்டும் என அந்த நிறுவனம் வெளிப்படையாகவே நிபந்தனை விதித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ள ரெடிட் பயனர் ஒருவர், அந்த நிறுவனம் வைத்துள்ள எதார்த்தமற்ற கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Is it normal for job descriptions to casually threaten you before you even join?
byu/ThingImportant3517 inrecruitinghell

அந்த விளம்பரத்தில், “வேகமாகச் செயல்படும் எங்கள் சூழலுக்குப் பழக முடியாமல் பல ஊழியர்கள் முதல் 2 மாதங்களிலேயே வெளியேறி விடுகிறார்கள்” என்ற எச்சரிக்கையும் இடம் பெற்றுள்ளது.

“வாழ்க்கையில் முன்னேறத் தூக்கத்தையும், ஓய்வையும் தியாகம் செய்ய வேண்டும்” என்ற ரீதியில் அந்த நிறுவனம் பேசுவது, ஊழியர்களை அடிமைகளாக நடத்துவதற்குச் சமம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.