இணையதளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பூனை ஒன்று கார் ஓட்டுநரிடம் காட்டும் கோபம் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு பூனை தனது வாயில் ஒரு புறாவைக் கவ்விக்கொண்டு சாலையைக் கடக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று பலமாக ‘ஹார்ன்’ அடிக்க, பயந்துபோன பூனை துள்ளிக்குதித்து ஓடுகிறது.
அந்த நேரத்தில் அதன் வாயிலிருந்து புறா நழுவித் தப்பியோடி விட, தன் வாய்க்கு வந்த உணவை நழுவவிட்ட ஆத்திரத்தில் பூனை செய்த காரியம்தான் இப்போது ட்ரெண்டிங்.
भलाई का तो जमाना ही नहीं है 😅
शुभ रात्रि साथियों 🥰 pic.twitter.com/4gjITdqeaE— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚 𝐌𝐞𝐞𝐧𝐚 (@Shreya_Tonk) December 17, 2025
தன் உணவைப் பறி கொடுத்த ஆத்திரத்தில், அந்தப் பூனை நேராகக் காரை நோக்கிப் பாய்ந்து வந்து தாக்க முயல்கிறது. காரின் ஜன்னல் கண்ணாடி மூடியிருந்ததால், பூனையால் உள்ளே இருந்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனாலும் விடாத அந்தப் பூனை, கண்ணாடியைத் தனது நகங்களால் கீறியும், பயங்கரமாகச் சத்தமிட்டும் டிரைவரை மிரட்டுகிறது. பூனையின் இந்தத் தீவிரமான கோபத்தைப் பார்த்துச் சிரித்த டிரைவர், அதனிடம் “சாரி” கேட்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த இந்த வீடியோவிற்கு, “நல்ல காலம் பூனையிடம் அடி வாங்காமல் தப்பித்தார் டிரைவர்” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
