சமூக வலைதளங்களில் சமீபகாலமாகப் பகிரப்படும் சில காணொலிகள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு துணியை எடுப்பதற்காகத் தனது பெற்ற பிள்ளையையே ஆபத்தான முறையில் தலைகீழாகத் தொங்கவிட்ட பெற்றோரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொலியில், ஒரு சிறுவனின் இடுப்பில் துணியைக் கட்டி, பக்கத்து வீட்டின் கூரையில் விழுந்த துணியை எடுப்பதற்காக அவரைத் தலைகீழாகக் கீழே இறக்குகின்றனர். அந்தச் சிறுவன் துணியை எடுத்த பிறகு அவரை மேலே இழுக்கும்போது, அவர் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிய காட்சி காண்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jitender Pal (@jitenderpal879)

ஒரு சிறு துணிக்காகப் பிஞ்சு உயிரைப் பணயம் வைத்த பெற்றோரின் இந்த அறியாமையை இணையவாசிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஒரு சிறிய தவறு நேர்ந்திருந்தாலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.