சீனாவின் செங்டு (Chengdu) நகரில் நடைபெற்ற பிரபல பாடகர் வாங் லீஹோம் (Wang Leehom) இசை கச்சேரியில், மனிதர்களைப் போலவே உருவம் கொண்ட 6 ஹியூமனாய்டு ரோபோக்கள் (Humanoid Robots) மேடையில் தோன்றி நடனமாடி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளன.
வெள்ளி நிற உடையில் மின்னிய இந்த ரோபோக்கள், பாடகரின் ‘Open Fire’ என்ற பாடலுக்கு ஏற்ப கைகளை அசைத்தும், கால்களை உதைத்தும் துல்லியமாக நடனமாடின. இயந்திரத்தனமாக இல்லாமல், உண்மையான பேக்-அப் டான்ஸர்களைப் போலவே இவை ஆடியதைக் கண்டு அங்கிருந்த கூட்டமே ஆர்ப்பரித்தது.
Robots in China are doing it all now, even dancing on stage like pros.
Here Unitree robots doing Webster flips and are performing at Chinese-American singer Wang Leehom’s concert in Chengdu.pic.twitter.com/2BNWdok0bf
— Rohan Paul (@rohanpaul_ai) December 19, 2025
இந்த நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, ஆறு ரோபோக்களும் ஒரே நேரத்தில் ‘வெப்ஸ்டர் ஃபிளிப்’ (Webster Flip) எனப்படும் அந்தரத்தில் குட்டிக்கரணமிடும் சாகசத்தைச் செய்து காட்டின. ‘யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ்’ (Unitree Robotics) என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோக்களின் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த உலகப் பணக்காரர் எலான் மஸ்க், “மிகவும் பிரமாதம்” (Impressive) என வியந்து பாராட்டியுள்ளார். வெறும் நடனத்தோடு நிற்காமல், கடினமான சர்க்கஸ் சாகசங்களையும் ரோபோக்கள் செய்யத் தொடங்கியிருப்பது, பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் இனி ரோபோக்கள் வசம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
