தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ், கடந்த மார்ச் மாதம் அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

மகளின் நிலைமையை அறிந்து அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த தாயாரிடம், பரமேஷ் சமாதானம் பேசி மீண்டும் அனுஷாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த பரமேஷ் தெருவில் கிடந்த உருட்டுக் கட்டையால் அனுஷாவைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அனுஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

“>

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.