துபாயில் வசிக்கும் இந்தியரான அலிஷா ஹமிராணி என்பவர், அந்த நகரின் பாதுகாப்பைச் சோதிப்பதற்காகத் தனது விலையுயர்ந்த ‘ஹெர்ம்ஸ் பிர்கின்’ (Hermes Birkin) கைப்பையை மக்கள் நடமாடும் இடத்தில் அப்படியே விட்டுச் சென்றார்.

சுமார் ₹24 லட்சம் (1,00,000 திர்ஹம்) மதிப்புள்ள அந்தப் பையை அங்கேயே வைத்துவிட்டு, அவர் ‘அப்ரா’ படகு சவாரிக்குச் சென்றார். சவாரி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பை என்ன ஆனது என்பதை அவர் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட, அது இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Alisha Hamirani (@bikergirldubai)

படகு சவாரி முடிந்து அலிஷா திரும்பி வந்து பார்த்தபோது, அவர் வைத்த ₹24 லட்சம் மதிப்பிலான பை யாராலும் தொடப்படாமல், அவர் வைத்த இடத்திலேயே அப்படியே இருந்தது.

இதைக் கண்டு நெகிழ்ந்த அவர், “இது துபாயில் மட்டுமே சாத்தியம்” என ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், தாங்களும் இதேபோல் துபாயில் செல்போன் மற்றும் பணப்பைகளை மறந்து வைத்துவிட்டுப் பின்னர் வந்து எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நகரமாகத் துபாய் விளங்குவதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.