பெங்களூருவில் தனியாக வசிக்கும் ஒரு பெண், தனது மாதாந்திர செலவு ஒரு லட்சம் ரூபாய் என சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கொடுத்திருக்கும் செலவு விவரங்களின்படி, வாடகை, மின்சாரம், மளிகை உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் ரூ.40,000 ஆகிறது. வார இறுதி நாட்களில் வண்டிப் பயணம், நண்பர்களைச் சந்திப்பது போன்றவற்றுக்கு ரூ.5,000, தினசரி உணவுக்கு ரூ.6,000, மாதாந்திர EMI ரூ.18,000 மற்றும் ஷாப்பிங், அழகு சாதனப் பொருட்கள் போன்ற ஓய்வு நேரச் செயல்பாடுகளுக்கு ரூ.25,000 என செலவழிக்கிறார்.
இந்த அதிகப்படியான செலவுகள் காரணமாக தன்னால் போதுமான அளவுக்கு சேமிக்க முடியவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பல இணையவாசிகள், ‘கடினமாக உழைத்து செலவழிக்கலாம்’, ‘சேமிப்பைத் தொடங்குங்கள்’ போன்ற பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பெங்களூருவில் வாழ்வது மிகவும் விலை உயர்ந்தது என்று தங்கள் சொந்த அனுபவத்தையும் பல பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
