தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வாசுகி, தற்போதுச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட வாசுகி, ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி, அரசியலிலும் (அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர்) ஈடுபட்டார். எனினும், அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டதால், நிதி நெருக்கடி மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு, நடிகர் சங்கத்தில் உதவி கேட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் கஷ்டப்பட்ட நடிகை வாசுகி, தற்போது ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம், ஆத்ரேயபுரம் போபர் லிங்காவில் உள்ள ஸ்ரீராம முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.
அவரது நிலையைப் பார்த்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சுவிஷ்ணு, அவருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும், ஆந்திர துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் அவருக்கு ₹4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாகவும், முதலமைச்சர் சந்திரபாபு, அமைச்சர் லோகேஷ் ஆகியோர் எல்லா வகையிலும் உதவுவதாகவும் வாசுகி தெரிவித்துள்ளார்.
